தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தற்போது மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும் என்று ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இலங்கை ராணுவத்திற்கு எதிரான போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிகள் நினைவாக பல இடங்களில் இன்று ஈழத் தமிழர்களால் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தான் மாவீரர் போற்றுதும் மாவீரர் போற்றதும் என்று ஈழத்தமிழர்களின் நினைவை அனுசரிக்கும் விதமாக அவர் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விடுதலைப்புலிகள் நினைவாக ஈழ தமிழர்களால் அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தை அனுசரிக்கும் இடமாக வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.