மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படம் வெளியானால் தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகி, இரு சமூக மக்களிடையே பிரச்சனை ஏற்படும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ‘அனைவருக்கும் கருத்து பேச சுதந்திரம் உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை போலீசார் பார்த்துக் கொள்வார்கள்’ எனக்கூறினர். ‘தேவர்மகன்’ படம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.