கோவாவில் பி.டி.ஐ தனது துறைகளில் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கவும் செலவினங்களை கட்டுப்படுத்தவும் அரசியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் வட்டி செலுத்துதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தவிர பிற பட்ஜெட் வருவாய் செலவினங்களில் 25% குறைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும். ஜனவரி 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பல்வேறு துறைகளுக்கு பொருட்களை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதற்கு முந்தைய மாதங்களில் வாங்கிய செலவினங்களை திருப்பி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.