கர்நாடக மாநிலம் பெங்களூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 25 ஆயிரத்து 397 மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு BBMP திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தில் மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் முதல் உள்ளாட்சி அமைப்பாக இது மாறிவிடும்.

இதற்காக நகரத்தில் 33 உயர்நிலைப் பள்ளிகள், 96 தொடக்கப் பள்ளிகள், 18 PU கல்லூரிகள், பட்டைய கல்லூரிகள் மற்றும் 93 நர்சரி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு இது குறித்த தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.