நகரத்தின் 18 லட்சம் ரூபாய் சம்பளம் கொண்ட தனியார் வேலை மற்றும் சொந்த ஊரில் 7 லட்சம் ரூபாய் சம்பளம் கொண்ட அரசு வேலை – இவை இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் 10 ஆண்டுகால நிதி மேலாண்மை மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு, நகர்ப்புறத்தில் அதிக செலவுகள் மற்றும் மன அழுத்தங்களுக்கு மத்தியில் சேமிப்பது கடினம் என்றும், அதேசமயம் சொந்த ஊரில் அரசு வேலையில் இருக்கும் நிம்மதியும், நீண்ட கால அடிப்படையில் சேமிப்பும் அதிக பலனைத் தரும் என்றும் பலர் வாதிடுகின்றனர்.

இந்த ’10 ஆண்டு கால கணக்கீடு’, வாழ்க்கையின் தரம் மற்றும் நிதி சுதந்திரம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள சமநிலையை சரியாகப் பிரதிபலிக்கிறது. பெரிய நகரங்களில் கிடைக்கும் அதிக சம்பளம் கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், அங்கே வசிக்கும் வீட்டின் வாடகை, போக்குவரத்துச் செலவுகள் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை நமது சேமிப்பை வெகுவாகக் குறைக்கின்றன.

மாறாக, சொந்த ஊரில் குறைந்த ஊதியமாக இருந்தாலும், அங்குள்ள வாழ்வியல் செலவுகள் குறைவு என்பதால், வாழ்க்கை முறை மேம்படுவதோடு, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும் கிடைக்கிறது. பணத்தை விட மன அமைதி மற்றும் வாழ்வாதாரத்தின் நிலைத்தன்மை முக்கியம் என்று கருதும் பலருக்கு, இந்த ஒப்பீடு ஒரு முக்கியமான பாடமாக அமைகிறது.