சென்னை சேர்ந்த மாணவி ஒருவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு தெரு நாய் மாணவியின் கையில் கடித்து குதறியது. உடனே அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை காப்பாற்றி நாயை விரட்டி அடித்தனர். அதன் பிறகு தொடர்ந்து அட்டகாசம் செய்யும் அந்த நாய் பற்றி உரிமையாளரிடம் புகார் அளித்தனர்.

ஆனால் அந்த நாயின் உரிமையாளர் அது குழந்தை மாதிரி. என் வீட்லயும் ரெண்டு சின்ன பிள்ளைங்க இருக்காங்க. ஆனா நாய் கடிக்காது. பெரிய பெரிய நாயை வளர்க்க முடியாது. அதனால் தான் தெரு நாயை வளர்க்கிறேன் என தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.