
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. சமீபத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 28ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் இந்த தேர்வை 4,88,876 பள்ளி மாணவ மாணவிகளும், 25, 888 தனித்தேர்ர்களும், 272 சிறை கைதிகளும் என மொத்தம் 9,13,036 பேர் எழுதுகிறார்கள்.
இதனையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த ஹால் டிக்கெட்டை http:www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.