மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. அதேபோன்று 12-ம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 21 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் எழுதிய நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்ததனர். இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்குரிய முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CBSE 2023 பொதுத்தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?

results.cbse.nic.in (அ) cbse.gov.in. எனும் இணையதளங்களுக்குள் செல்ல வேண்டும். இதையடுத்து முகப்பு பக்கத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர் எனில் “Secondary School Examination Class X Results 2023 Announced” என்ற லின்கையும், 12-ம் வகுப்பு மாணவராக இருப்பின் “Senior School Certificate Examination Class XII Results 2023 Announced” என்ற லின்கையும் கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவு எண், பாஸ்வோர்ட் மற்றும் இதர விபரங்களை உள்ளீடு செய்துவிட்டு சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களது தேர்வு முடிவானது வெளிப்படும். அதனை நீங்கள் டவுன்லோட் (அ) பிரிண்ட் செய்துக்கொள்ளலாம்.