ஆசிரியர்கள் மாணவர்களுடன் டேட்டிங் செய்யக்கூடாது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் நெருங்கி பழகும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தொழில் முறை அல்லாத நெருக்கத்தை ஊக்குவிக்க முடியாது என்ற பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஒரு மாணவருக்கு எந்த பொறுப்பையும் கொண்டிருக்கும் விரிவுரையாளர்கள் அல்லது ஆசிரியர்கள் நெருக்கமான உறவில் நுழைந்தார் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.