நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாணவியருக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது. ராசிபுரம் வட்டாரத்தில் நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவியர் கிராமப்புற வேளாண்மை பயிற்சி பயின்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் சக்திவேல், திட்ட இயக்குநர் சத்யராஜ் ஆகியோர் வழிகாட்டுதலில் கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள வெண்பா காளான் பண்ணை, தேனீ பண்ணையில் சிப்பி காளான் வளர்ப்பு பற்றி பயிற்சி பெற்றனர். இதில், சிப்பி காளான் வளர்ப்பு, தொழில்வாய்ப்பு பற்றியும், அதன் செலவு, சந்தைப்படுத்தல் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.