மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் நிலையில் இந்த முறை 126 வது மலர் கண்காட்சி மே பத்தாம் தேதி இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கண்காட்சியை காண வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் பயணிகள் வந்து செல்ல போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.