தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் இன்று  முதல் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். விரைவில் பொது இடங்களிலும் முகக்கவசம்
கட்டாயமாக்கப்படும் என தெரிகிறது.