
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயம் முழுமையாக ஒழியும், சசிகலா தொண்டர்களை சந்திக்க வருவதை வரவேற்கின்றேன், 90 சதவீத தொண்டர்களை இணைத்துவிட்ட சசிகலா நடவடிக்கையை வரவேற்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஸிடம், மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஓபிஎஸ்ஐ சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல அவர் யார்? எடப்பாடி பொதுச்செயலாளராக உள்ளாரே என்று கேட்டபோது பொதுச்செயலாளர் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது, அதனால் அவர் பொதுச் செயலாளர் ஆக முடியாது. கட்சியின் நலன் கருதி அமைதியாக இருக்கின்றேன். அவரைப் போல சர்வாதிகாரத்தனமாக பேசமாட்டேன். இது நாட்டு மக்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றாக தெரியும் என தெரிவித்துள்ளார்.