முரசொலி மாறன் 1996, 1998, 2001 என தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி இது. முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில் தயாநிதி மாறன் 2006, 2009, 2019 தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2014ஆம் ஆண்டு மட்டுமே இங்கு அதிமுக வெற்றி பெற்றது. மீண்டும் 2019இல் தயாநிதி வெற்றிபெற்றார். தற்போது மீண்டும் மத்திய சென்னையை திமுக கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், மன்னிச்சிடுங்க மோடிஜி… உங்களை நான் தலை குனிய வைத்து விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்