
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் வருடம் வெளியான படம் பீஸ்ட். இந்த படத்தில் வீரராகவன் ஆக விஜய் நடித்திருந்தார். இந்த நிலையில் வீரராகவனின் லுக் டெஸ்ட் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த நேரத்தில் விஜய் பட வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்று ரசிகர்கள் வியந்து பேசுகிறார்கள். ஏனெனில் தயாரிப்பாளர் என்ற முறையில் பீஸ்ட் வீடியோவை வெளியிட சன் பிக்சர்ஸ் அனைத்து உரிமை உள்ளது. ஆனால் திமுக அரசை விஜய் விமர்சித்த வேகத்தில் இந்த வீடியோ வெளியிட்டது ஆச்சரியப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னராட்சி நடத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே உங்கள் ஆட்சி பற்றி கேட்டால் உங்களுக்கு ஏன் சார் இவ்வளவு கோபம் வருகிறது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். இதுல உங்கள அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்று சொல்றீங்க என்று ஆவேசமாக பேசியிருந்தார் . அவர் இப்படி பேசிய பிறகும் கூட பீஸ்ட் வீடியோ அதுவும் மாஸ் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு அரசியல் வேறு சினிமா வேறு என்று அழகாக நிரூபித்து விட்டது. இதுதான் கலாநிதி மாறனின் மெச்சூரிட்டி என்று சினிமா ரசிகர்கள் கூறுகிறார்கள்.