கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பா கவுண்டன் புதூரில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கிய லதா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பாக்கிய லதா கீத்திபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் வலி மற்றும் தூக்கம் இல்லாமல் பாக்யலதா அவதிப்பட்டு வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். நேற்று அதிகாலை கண்விழித்துப் பார்த்த ராஜேஷ்குமார் வீட்டு பூஜை அறையில் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாக்யலதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.