உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அந்த பெண்ணின் கணவர் வேலைக்காக வெளியே சென்ற நிலையில் திடீரென வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது அவருடைய மனைவி பக்கத்து வீட்டு நபருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த நபரை கொடூரமாக தாக்கி அவருடைய ஆணுறுப்பை கடித்துவிட்டார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட உடனடியாக மருத்துவமனைக்கு ஓடி சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் இருதரப்பிலிருந்து எந்த ஒரு புகார் வரவில்லை என போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய முறையில் புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.