
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் படங்கள் தயாரித்து பிரபலமானாரோ இல்லையோ சர்ச்சையான விஷயங்கள் பற்றி பேசுவது மற்றும் அவரது திருமணம் போன்ற விஷயங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். உடல் எடை அதிகமாக இருக்கும் இவரை மகாலட்சுமி திருமணம் செய்ததே பணத்திற்காகத்தான் என்று பல விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அவர்கள் இருவருமே இதையெல்லாம் நினைக்காமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய மனைவி மகாலட்சுமியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அன்பு என்பது கவனிப்பை பற்றியது மற்றும் ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பையும் அக்கறையும் நான் கண்டேன், நான் இப்போது உறுதி அளிக்கிறேன் மீதமுள்ள 364 நாட்களும் உங்களை கவனித்துக் கொள்வேன், நான் இன்று சிரிக்கவில்லை அதைவிட சந்தோசமாக இருக்கின்றேன், குடும்பத்தை நேசித்து வாழுங்கள் என்று ஒரு அழகான பதிவை பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க