ஐக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (IML) தொடரில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங் தனது பழைய அதிரடி ஆட்டத்தை  காட்டியுள்ளார். மார்ச் 13ஆம் தேதி ராய்பூரில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 30 பந்துகளில் 59 ரன்களை அடித்து  ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தார். முதலில் களமிறங்கிய இந்திய மாஸ்டர்ஸ் அணி 220/7 என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்தது. சச்சின் டெண்டுல்கர் (42 ரன், 30 பந்தில்), ஸ்டுவார்ட் பின்னி (36 ரன், 21 பந்தில்) மற்றும் இர்பான் பதான் (19 ரன், 7 பந்தில்) ஆகியோரும் அணிக்கு வலுவான ஸ்கோரரை சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சிதைத்த யுவ்ராஜ்!

தனது முந்தைய போட்டிகளில்  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதிப் போட்டிகளில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவ்ராஜ், அதே பயத்தை அவர்களுக்கு காண்பித்தார். பிரைஸ் மெகெய்ன், ஸ்டீவ் ஓ’கீஃப், சேவியர் டோஹெர்ட்டி போன்ற ஸ்பின்னர்களை தனது பாரம்பரிய ப்ளிக் மற்றும் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டுகளால் பல தடவைகள் வான வேடிக்கை காட்டினார். 26 பந்துகளில் அரைசதம் அடித்த யுவ்ராஜ், மெகெய்னின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து தனது ஆதிக்கத்தை பதித்தார். இது அவரது முந்தைய சாதனைகளை நினைவுபடுத்தியது – 2000 ICC நாக்அவுட் போட்டியில் 86 ரன், 2007 T20 உலகக் கோப்பை அரையிறுதியில் 70 ரன், 2011 உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய ஆட்டம் போன்றவையாக  அமைந்தது.

“>

 

ராய்பூர் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணம்!

இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர், யுவ்ராஜ் ஆகிய இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 47 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்த கூட்டணி இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. சமீபத்தில் நடந்த இமல் லீக் குழு போட்டியில் யுவ்ராஜ் விளையாடவில்லை, அதில் ஆஸ்திரேலியா இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அரையிறுதியில் யுவ்ராஜின் அபார ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தது. ரசிகர்கள் “பழைய யுவி ப்ளே பாக்கிறோம்!” என்று உற்சாகத்துடன் கொண்டாட, அவரது ப்ளாட் ஸ்வீப் மற்றும் பவர் ஹிட்டிங் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஒரு பாடமாக மாறியது.