டெல்லியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் கடந்த 56 நாட்களில் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு சுமார் 474 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியிருப்பதாவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இது தொடர்பாக டெல்லி தலைமை செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.