
பப்புவா நியூ கினியாவில் உள்ள கொரோவாய் என்ற பகுதியில் வசிக்கும் பழங்குடியின மனிதர்கள் மனிதர்களைக் கொன்று சாப்பிடுவதை சகஜமாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஆடை அணியாமல் தான் இருப்பார்களாம். காகுவா என்ற அரக்கன் மனிதர்களுக்குள்ளே புகுந்து அவரை சூனியக்காரர்களாக மாற்றுகிறார் என்பது கொரோவாய் மக்களின் நம்பிக்கை.
இதனால், பேய் பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொன்று சாப்பிட்டுவிட வேண்டும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். வெளியுலக மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் இவர்கள், சந்தேகத்துக்கு இடமாக யாராவது அவர்கள் இடத்திற்கு வந்தால் கொன்று உணவாக்கிக் கொள்கிறார்கள் என்று கோரோப்பிடுகிறது.