இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல்வேறு பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனை ரூபாய்.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம் என டிபிஎஃப் தேசிய தலைவர் பங்கஜ் ஓஸ்வால் தெரிவித்து உள்ளார். இப்போது இந்த விலக்கு 50 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் இந்த கோரிக்கையை அரசு ஏற்றால், வரிவிலக்கு நிவாரணம் கிடைக்கும். ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் என்பது உங்களது சம்பளத்தில் இருந்து நேரடியாக கழிக்கப்படும் தொகை. அதன்படி, உங்களது ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய் எனில் தற்போதுள்ள விதிகளின் படி, வருமானத்தை 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அரசு கருதும்.

மாற்றாக, இந்த விலக்கு ரூபாய்.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டால், புது விதிகளின்படி ரூபாய்.10 லட்சம் வருமானத்தை ரூ.9 லட்சமாக வருமான வரித்துறை கருதும்.  பிபிஎப்-ல் இதுவரையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் டிபிஎஃப் தற்போது பிபிஎஃப்-ல் அதிகபட்ச முதலீட்டு வரம்பை உயர்த்தவேண்டும் என கோரியுள்ளது. இப்போது ஒரு நிதி ஆண்டில் பிபிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இதனை 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என டிபிஎப் கோரிக்கை விடுத்து உள்ளது. பிபிஎஃப்-ல் முதலீடு செய்யப்பட்ட தொகை எதுவாக இருந்தாலும், அதற்கு வருமான வரித்துறை சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்களிக்கப்படுகிறது.

இவ்வழியில் இந்த பட்ஜெட்டில் முதலீட்டின் அளவு ரூபாய்.3 லட்சமாக உயர்த்தப்பட்டால், வரிசெலுத்துவோருக்கு இது மிகப் பெரிய நிவாரணமாக அமையும். ஏனென்றால் இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக முழுத்தொகைக்கும் வரி விலக்கு கிடைக்கும். அத்துடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் புது வருமான வரி ஸ்லேபுகளை சேர்க்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 5 -10 லட்சம் வரை வருமானம் இருப்பவர்கள் குறைந்த வரிசெலுத்தினால் போதுமானதாக இருக்கும். இம்முறை நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசை வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு உள்ளார்.