
மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள் – என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. அதில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் 1.2 லட்சம் வழங்கும் திட்டம் ஆகும். இதில் 72 ஆயிரம் மத்திய அரசும், 48 ஆயிரம் தமிழ்நாடு அரசும் வழங்குகிறது.
தமிழக அரசு வழங்கும் தொகை போதாது என்பதால் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. மொத்தம் திட்டத்தில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேற்கண்ட ரெண்டு புள்ளி நான்கு லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70 சதவீதம் பணத்தையும் மத்திய அரசு 30 சதவீதம் பணத்தை மட்டுமே தருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
