மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எட்டாவது ஊதிய குழுவிற்கான ஆலோசனை அதற்கு முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த எட்டாவது ஊதிய உயர்வு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயர்த்தப்பட்ட அடிப்படை சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.