இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால கெடுவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக அறிவித்தபடி செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு மட்டுமே மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளில் 50 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 85 சதவீதம் ஓட்டுகள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நோட்டுகள் பிற நோட்டுகளாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். மே மாதம் 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.