மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NBCFDC) பெண்களின் நலனுக்காக ஸ்வர்ணிமா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு கடன் வழங்குகிறது.

மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கடன் வழங்கும். விண்ணப்பதாரர் பெண்ணாக இருக்க வேண்டும். வயது 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.