தமிழகத்தில் 200 மதுபானக் கடைகளை புதுப்பொலிவுடன் மின்விளக்கில் ஜொலிக்கும் விதமாக நவீனமயமாக்கப்பட்ட உள்ளதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. அதேசமயம் மதுபான கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் மதுபான கடைகளை நவீன மயமாக மாற்றுவதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்க வேண்டும் என்றும் மதுபான கடை ஊழியர்களுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும் பள்ளி மாணவர்கள் கூட சர்வ சாதாரணமாக மது அருந்தி வருகிறார்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மது அருந்தி வருவதால் நாட்டில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் மது அருந்துவதை தடுக்க முதல் முறையாக மது அருந்து வரும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை கண்டறிந்து அந்த சிறுவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.