செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மத்திய அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் (CRPM)  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்கில் தமிழ்நாட்டில்  கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான மீனவ கிராமங்கள், மீனவர்களுடைய வாழ்வாதாரப்பகுதியில் விடுபட்டு இருக்கின்றன. செங்கல்பட்டுல 44 மீனவ கிராமத்தில்,  15 கிராமத்தின் பெயர் மட்டும் தான் ஒழுங்கா குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல நாகப்பட்டினத்தில் அக்கரைபேட்டை,  நம்பியார் நகர்,  காமேஸ்வர நகர்,  புஷ்பவனம்,  விழுந்தமாவடி என்ற முக்கியமான பகுதிகள் இதில் குறிப்பிடப்படவில்லை.மயிலாடுதுறையில் பாத்தீங்கன்னா….  பூம்புகார் உள்ளிட்ட வெள்ளக்கோயில், புது குப்பம், கீழமூவர் கரை, மேல மூவர் கரை ,  தொடுவாய்,  கீழையூர்,  சின்னகோட்டைமேடு, கோட்டைமேடு, மடவாய் மேடு, பழையாறு போன்ற மீனவ கிராமங்கள் இல்லை.

இதே மாதிரி தூத்துக்குடி மாவட்டத்தில் பார்த்தீங்கன்னா…. கீழ் உவரி, திருச்செந்தூர் அருகில் உள்ள தொல்லியல் இடமும்,  மனப்பாடு தவிர்த்த  கிராமங்களும் காணாமல் போயிருக்கின்றன. இது மாதிரியான மிக முக்கியமான பகுதிகள். இதேபோல காயல்பட்டின பகுதியில் இதே நிலைமைதான். ரோச்மா நகர், வைப்பாறு, பட்டண மருதூர்,  முத்தையாபுரம் இது எதுவுமே இல்ல.

புதுச்சேரியில் எடுத்துக்கொண்டால் ? காரைக்கால் மேடு,  கிளிஞ்சல் மேடு, அக்கம்பேட்டை, கோட்டச்சேரி, மண்டபத்தூர் போன்ற  பெரிய பகுதிகளுமே இல்லை. இது எல்லாம் சாதாரண மக்களுக்கு…   நிலத்தில் வாழக்கூடிய மக்களுக்கு…  கடற்கரை இல்லாத மக்களுக்கு இந்த பெயர் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மீனவ மக்களுக்கு இவையெல்லாம், மிக மிக முக்கியமான ஊர் பெயர்கள்.

இந்த ஊர் பெயர்களை அரசாங்க மேப்பில் இல்ல, வரைபடத்தில் இல்லை அப்படின்னா…..  அரசாங்கம் என்ன செஞ்சிட்டு இருக்கின்றது என கேட்கிறோம். ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் சுதந்திர தினத்தை வேற கொண்டாடுனீங்க…  512 கிராமங்களை நீங்கள் மேப்பில் சேர்க்காமல் சுதந்திர தினத்தை என்னத்துக்கு கொண்டாடுனீங்க ? அந்த சுதந்திர தினத்தை இந்த கிராமங்களுக்கு சேர்த்து கொண்டாடுனீங்களா…  இல்ல இந்த கிராமத்தை வெளி ஆளுக்கு வித்துட்டீங்களா என்ற கேள்வி எழுப்ப விரும்புகின்றோம்.

ஒன்றிய அரசு எப்போதுமே தேச பக்தி, தேச பக்தி என பேசக் கூடிய அரசு, இந்த எல்லையோர கிராமங்களிலே…. கடற்கரை கிராமங்களில் வாழக்கூடிய மக்களின்  சுற்றுப்புற சூழல் முக்கியத்துவமாய் இந்த பகுதிகளும் குறிப்பிடப்படாமல் இருக்கின்றன என தெரிவித்தார்.