சென்னையில் உள்ள தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு டெண்டர் விடுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மதுவை விற்பனை செய்யும் அரசாங்கத்தால் பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாதா என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறிக்கிட்ட அரசு வழக்கறிஞர் காரணம் இல்லாமல் அரசை குறை கூறினால் மௌனம் காக்க முடியாது என்றார். மேலும் இதைத் தொடர்ந்து வழக்கில் விசாரணையை வேறொரு தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.