
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு தொடர்பான அரசு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக கலால்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை நிர்ணயத்தின் கீழ், ஒரு லிட்டர் மதுவின் விலை குறைந்தது ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.325 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பெரும்பாலான பீர் வகைகளின் விலையும் ரூ.30 வரை உயர்ந்துள்ளன.
இந்த விலை உயர்வு, அரசு வருவாய் அதிகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளிலும், பார், ஹோட்டல்களிலும் வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.