
அமெரிக்காவின் மசூரி மாகாணத்தில் வசிக்கும் ஒருவர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு லன்ச் பாக்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்றதை நினைவு படுத்தியுள்ளார். ஆனால் பாதி வழி வந்து விட்டதால் அந்த நபர் அருகில் இருக்கும் பல சரக்கு கடைக்கு சென்று ஏதாவது வாங்கி மதியம் சாப்பிட்டு விடலாம் என நினைத்து சென்றுள்ளார்.
அங்கே தானாக தனது கண்ணில் தென்பட்ட முப்பது டாலர் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த லாட்டரிக்கு மூன்று மில்லியன் டாலர் கொடி பரிசு அடித்துள்ளது. (இந்திய மதிப்பில் 25.4 கோடி ரூபாய்) உடனே அந்த நபர் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். முதலில் அவரது மனைவி விளையாட்டாக கேலி செய்கிறார் என நினைத்து அதனை நம்ப மறுத்து விட்டார். அதன் பிறகு தான் அதை நம்பி உள்ளார்.