2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற்றது. இதில் அதானியின்  விவகாரத்தினால் பாராளுமன்றத்தின் அவைகளை எதிர்க்கட்சிகள் முடக்கின. இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம்  தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்திலிருந்து நேற்று மாலை வெளியான பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால் மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது