இன்று மார்ச் 7ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல் கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2024EH என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமியிலிருந்து 5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும். மணிக்கு 34183 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கல் இதற்கு முன்பு 1927 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பூமிக்கு அருகில் கடந்து சென்றது. மீண்டும் இது 2071 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.