உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது மீரட் நகரில் மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி அதன் பின் ஏமாற்றி தாயை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதாவது மாப்பிள்ளை பெண் பார்க்க வரும் போது முதலில் அந்த பெண்ணின் மகளை காண்பித்துள்ளனர். ஆனால் திருமணத்தன்று திடீரென அந்த பெண்ணுக்கு பதிலாக அவருடைய தாயை மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அந்தப் பெண் கணவனை இழந்த நிலையில் மாப்பிள்ளையை விட 25 வயது மூத்தவர். மாப்பிள்ளை திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த போது பாலியல் புகாரில் ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி தாலி கட்ட வைத்துள்ளனர்.

இந்த திருமணத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மணமகன் தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.