
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. தற்போது பெரும்பாலானவர்கள் கையில் செல்போன் இருப்பதால் வித்தியாசமாக நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மணமேடையில் மணமகன் மணமகளுக்கு மாலை மாற்றும் போது காதலி வந்து மணமகனை அடித்து வெளுத்த வீடியோ வெளியானது. ஆனால் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது சரிவர தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் திருமண மணமேடையில் நடந்துள்ளது. இந்த முறை புரோகிதர் கோபத்தில் தட்டை தூக்கி எறிகிறார். அதாவது ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தபோது அவர்கள் அக்னியை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது மணமக்கள் மீது பூக்களை வீசுவதற்கு பதிலாக அங்கிருந்த சில இளைஞர்கள் வேண்டும் என்று புரோகிதர் மீது பூக்களை வீசினர். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த புரோகிதர் கோபத்தை இழந்து அவர்கள் மீது தட்டை தூக்கி வீசினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ગોરદાદા નો મગજ હલી ગયો..😜🤣#viralvideo #marriage #wedding #weddinginspiration #VIDEO #VideoViral @kathiyawadiii pic.twitter.com/zi3vfYozYX
— Sanskar Sojitra (@sanskar_sojitra) December 25, 2024