திருமணத்தின் போது பொதுவாக மணமக்களை அனைவரும் வாழ்த்துவார்கள். ஆனால் மணமகளின் தாய் தனது மகளை கிரிக்கெட் பேட்டால் அடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒரு காதல் ஜோடி உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

வழக்கமாக நடைபெறும் திருமணம் போல் இல்லாமல் அவசர அவசரமாக நடத்தப்படும் திருமணத்தை போல் உள்ளது. மணமகள் மணமகனுக்கு மாலை அணிவிக்கிறார். அப்போது கோபமடைந்த மணமகளின் தாய் தனது மகளை கிரிக்கெட் பேட்டால் தாக்குகிறார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்கின்றனர். அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.