
துபாயை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான மூன்று நிமிடங்களில் கணவரை விவாகரத்து செய்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. ஒரு தம்பதிக்கு உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் அப்போது மணமகள் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருக்கு கை கொடுத்து உதவி செய்வதற்கு பதிலாக மணமகன் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணமகள் கீழே விழுந்ததும் கோபமடைந்த மணமகன் தனது புது மனைவியை பார்த்து, முட்டாள் பார்த்து நடக்க மாட்டியா என்று கேட்டுள்ளார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை தனது கணவர் முட்டாள் என்று கூறி அவமரியாதை செய்ததை மணமகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்று நினைத்த மணமகள் உடனே திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து நீதிபதியை அழைத்து தனக்கு உடனே விவாகரத்து வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே அந்த நீதிபதியும் விவாகரத்து வழங்கி விட்டார். திருமணம் ஆகி வெறும் மூன்று நிமிடத்தில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு விட்டது. துபாயில் இதுதான் மிகவும் குறுகிய கால திருமணம் என்றும் கூறப்படுகிறது.