மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கடந்த வருடம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று அதிக வசூலை குவித்தது. இந்த படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற மகத்தான சாதனையை படைத்தது.

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது, படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் மற்றும் ஒருசில காட்சிகளும் இணையத்தில் வைரலாகி நல்ல ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி நேற்று முன் தினம் ஒரு வருடம் முடிவடைந்தது. இதனை முன்னிட்டு குணா குகையை எப்படி செய்தார்கள் என்பது குறித்து படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Parava films (@paravafilms)