தமிழக வெற்றி கழகத்தின் பொது குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும்தான் போட்டி என்று கூறினார்‌. இதற்கு தற்போது அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, நேற்று வரை நடிகராக இருந்தவர் ஒரு முறை கூட பொதுமக்களை சந்திக்காதவர் கூட்டத்தை கூட்டிக்கொண்டு எங்களுக்கு முக்கியமான எதிரியே திமுக தான் என்கிறார். அவரையும் திமுக சந்திக்கும். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மு.க ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வருவார்.

முதல்வர் அமைதியாக இருந்தாலும் அனைத்து விஷயங்களையும் அவர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். மத்தியில் இருப்பவர்கள் திமுகவை அகற்ற வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அவர்களால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னொரு புறம் பாஜகவுடன் எப்போதுமே சேர மாட்டோம் என்று சொன்னவர்கள் என்று ஓடிப்போய் அவர்களை சந்திக்கிறார்கள். மேலும் மொத்தமாக அனைவரையும் சந்திக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்று கூறினார்.