ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு நடந்த சிறப்பு முகாம் நேற்றுடன் முடிந்த நிலையில் 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பில்லை என அரசு அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காத பயனாளிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.   2 கட்டங்களாக நடந்தமுகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.