
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் உடனடியாக கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி ஏசி இல்லாத டவுன் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 13 ரூபாயிலிருந்து 17 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணமாக 3 ரூபாய் வரையிலும் அதிகபட்ச கட்டணமாக 4 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏசி மற்றும் டவுன் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 13 ரூபாயாகவும், அதிகபட்சமாக 26 ரூபாயிலிருந்து 34 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு புதுச்சேரி மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.