தமிழகம் தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நவம்பர் மாதம் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமுக்கு தேவையான படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.