தக்காளி விலையானது சமீப நாட்களாகவே உச்சம் தொட்டு வருகிறது . இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அரசு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 முதல் 15 நியாய விலை கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 300 கடைகளில் ஏற்கெனவே தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக 200 கடைகளில் விற்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.