
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாத நேரங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் வருகிற ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியும், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதியும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.