இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் பகுதிநேர ஆன்லைன் வேலை எனக்கூறி சென்னையை சேர்ந்த பெண் ஊழியரிடம் ரூ. 66 லட்சம் மோசடி செய்த UPஐ சேர்ந்த கல்லூரி மாணவர் ரிதம் சவ்லா கைது செய்யப்பட்டார்.

இவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.19 லட்சத்தை போலீசார் முடக்கியுள்ளனர். இவர், ஆன்லைன் மோசடியில் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தொடரும் ஆன்லைன் மோசடியால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.