
இணையவழி மோசடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரின் வாட்ஸ் அப்பில் கனடா வங்கி என்ற குழுவில் இருந்து ஒரு லிங்க் வந்தது. பின்னர் APK மூலம் ஆதார் மற்றும் கேஒய்சி புதுப்பிக்காவிட்டால் கனரா வங்கி கணக்கு முடக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்பிய வாலிபர் APK பதிவிறக்கம் செய்து ஆதார் எண், ஏடிஎம் பின், CVV எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டார்.
அதன் பிறகு ஒரு ஓடிபி வந்தது. அந்த ஓடிபி-யை அவர் பகிரவில்லை. ஆனாலும் அவரது வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 6.6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர்சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.