வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்கும் 27 வயது மாணவரின் செல்போன் எண்ணுக்கு டெலிகிராமில் ஆன்லைன் பகுதி நேர வேலை மூலம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 28 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என குறுந்தகவல் வந்தது.

அதனை நம்பிய மாணவர் இணையதளத்தில் தனது வங்கி விவரங்களை பதிவிட்டு அந்த செயலி வழியாக கணக்கை தொடங்கினார். அவர் பல்வேறு தவணைகளாக 11 லட்சத்து 59 ஆயிரத்து 645 வரை முதலீடு செய்தார்.

ஆனால் அந்த தொகையை மாணவரால் திரும்ப பெற இயலவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.