மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவிருத்தி வருகிறது. ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைத்து ஆவணங்களுடனும் இதனை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார் மற்றும் பான் இணைப்பு செயல்பாட்டிற்காக கடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இதற்காக பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 30-ம் வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த  நிலையில் இந்த இணைப்பை இதுவரை மேற்கொள்ளாத எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மோசடி கும்பல் ஒன்று இறங்கி உள்ளது. அதாவது நீங்கள் இன்னும் உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கவில்லை, இதனால் உங்கள் பான் கார்டு செயலிழந்து விடும். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உடனடியாக நீங்கள் இணைத்து கொள்ளலாம் என செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அவர்களின் வங்கி கணக்குஉடனடியாக ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள பணம் திருடப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது போன்ற செய்திகளை நம்பி எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.