
உலக நாடுகளில் குரங்குமை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த இரு வராங்களுக்கு முன்பாக எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது இந்தியாவில் சாண்டி புரா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் குரங்கமை வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் அது தொடர்பான தீவிர நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 1965:ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாண்டி புரா பகுதியில் முதன்முறையாக இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனால்தான் அதற்கு சாண்டிபுரா வைரஸ் தொற்று என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த வைரஸ் தொற்று மீண்டும் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் 42 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு இருந்தால் உடனடியாக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த வைரஸ் தொற்று பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடுகள், மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த வைரஸ் தொற்றால் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரங்களில் உயிரிழந்த்து விடுகிறார்கள். எனவே இந்த வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருந்தால் உடனடியாக மக்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் இந்த தொற்றினால் நாடு முழுவதும் ஜூன் முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.