நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணம் ஆகும். அதன்பிறகு வருமான வரி செலுத்துபவர்களுக்கு பான் கார்டு என்பது ஒரு முக்கிய ஆவணம். இது  வங்கிகளில் அதிக அளவிலான பணத்தை எடுப்பதற்கும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதற்கும் ‌ முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் மத்திய அரசு ஆதார் அட்டையுடன் முக்கிய ஆவணங்களை இணைக்குமாறு அறிவுறுத்திவரும் நிலையில் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டையும் இணைக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இன்றுடன் கால  அவகாசம் நிறைவடைகிறது. மேலும் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்காவிடில் பான் கார்டு முடக்கப்படும் எனவும் இதனால் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.